ADDED : ஆக 12, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், முக்கூடல் ராஜகணபதி கோவிலில் மண்டல அபிேஷக நிறைவையொட்டி, 108 சங்காபிேஷகம் நடந்தது.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கரையில் முக்கூடல் ராஜகணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷகத்தை முன்னிட்டு மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது.
விழாவில் ராஜகணபதி சுவாமிக்கு கலசம் மற்றும் 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.
திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
