/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு கட்டும் திட்டத்தில் 42 பயனாளிகளுக்கு ஆணை
/
வீடு கட்டும் திட்டத்தில் 42 பயனாளிகளுக்கு ஆணை
ADDED : ஜன 05, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 42 பயனாளிகளுக்கு ரூ. 50.40 லட்சத்தில் ஆணை வழங்கப்பட்டது.
அரியாங்குப்பம் தொகுதியில் மத்திய அரசு வழங்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.
காமராஜர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஒருவருக்கு ரூ. 1.20 லட்சம் வீதம் முதல் தவணையாக 42 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 50.40 லட்சத்திற்கான ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளிடம் வழங்கினார்.