/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மங்கள வாராஹி ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்
/
மங்கள வாராஹி ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்
ADDED : ஜூன் 26, 2025 06:46 AM

புதுச்சேரி : திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் மங்கள வாராஹி ஆஷாட நவராத்திரி விழா நேற்று சிறப்பு யாக வேள்வியுடன் துவங்கியது.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், காசியிலும் வீசமுள்ள காமாட்சி, மீனாட்சி உடனுறை கெங்கவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மங்கள வாராஹி ஆஷாட நவராத்திரி விழா நேற்று துவங்கியது.
வரும் 4ம் தேதி வரை நடக்கும் விழாவை முன்னிட்டு, தினமும் மாலை 5:00 மணிக்கு வாராஹி சிறப்பு யாக வேள்வி, மாலை 6:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி கலசாபிேஷகம், 7:30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
வரும் 29ம் தேதி ஆஷாட பஞ்சமியை முன்னிட்டு, மாலை 4:00 மணிக்கு சிறப்பு யாகம், 5:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 6:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி கலசாபிேஷகம், 7:00 மணிக்கு வாராஹி காய், கனி சிறப்பு சாகம்பரி அலங்காரத்தில் உள்புறப்பாடு நடக்கிறது.
வரும் 4ம் தேதி ஆஷாட நவராத்திரி நிறைவு விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு சிறப்பு யாகம், 10:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 11:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறம்பாடு, 11:30 மணிக்கு கலசாபிேஷகம், 12:00 மணிக்க மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது.