/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரபல ரவுடியுடன் கூட்டாளிகள் கைது மங்கலம் போலீசார் அதிரடி
/
பிரபல ரவுடியுடன் கூட்டாளிகள் கைது மங்கலம் போலீசார் அதிரடி
பிரபல ரவுடியுடன் கூட்டாளிகள் கைது மங்கலம் போலீசார் அதிரடி
பிரபல ரவுடியுடன் கூட்டாளிகள் கைது மங்கலம் போலீசார் அதிரடி
ADDED : ஜூலை 11, 2025 04:07 AM

வில்லியனுார்:கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் கூட்டாளிகளுடன் கஞ்சா அடித்துக்கொண்டிருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் சிலர் போலீசாரை கண்டு தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
கரிக்கலாம்பாக்கம், அரசகுளம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான தாடி அய்யனார் (எ) ராஜதுரை, 28; கணுவாப்பேட் மூர்த்தி மகன் தினேஷ், 23; புதுநகர் சங்கர் மகன் ரோகித், 21; டி. ஆண்டியார்பாளையம் நாராயணன் மகன் அருள்பாண்டி, 28; கணுவாப்பேட்டை மோகன் மகன் ஆகாஷ், 20, ஆகியோர் என தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய சோதனையில் 450 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ஒரு கத்தி, ஒரு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அனைவரும் கஞ்சா அடிப்பதற்கு கூடியிருந்ததும், தற்காப்புக்காக கத்தி மறைத்து வைத்திருந்தும் தெரியவந்தது.
பிரபல ரவுடி தாடி அய்யனார் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உட்பட 33 வழக்குகள் உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, ஐந்து பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.