
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவிலில் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா நடந்தது.
புதுச்சேரி, வேதபுரீஸ்வரர் கோவிலில், சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில், 23ம் ஆண்டு மாங்கனித் திருவிழா நடந்தது.
இதையொட்டி, காலை வேதபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி மற்றும் காரைக்கால் அம்மையார் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, காரைக்கால் அம்மையார் மாங்கனித் தேரில் சுவாமி உள் புறப்பாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு மாங்கனி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.
மாலை 'மாங்கனித்தாய்' தலைப்பில் முருகசாமியின் சிறப்பு சொற்பொழிப்பு நடந்தது.