/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னரின் செயலராக மாணிக்கதீபன் நியமனம்
/
கவர்னரின் செயலராக மாணிக்கதீபன் நியமனம்
ADDED : மார் 14, 2024 05:35 AM
புதுச்சேரி : கவர்னரின் தனி செயலராக மாணிக்கதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி கலெக்டர் வல்லவன் புதுச்சேரியில் இருந்து கோவாவிற்கும், மற்றொரு புதுச்சேரி ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சவுத்ரி அபிஜித் விஜய் சண்டிகாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.இவர்கள் கவனித்து வந்த பொறுப்புகளிலிருந்து கடந்த 11ம்தேதி விடுவிக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து இவர்கள் கவனித்த துறை வகித்த பொறுப்புகள் பிற ஐ.ஏ.எஸ்.,பி.சி.எஸ்.,அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அதன்படி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சவுத்ரி அபிஜித் விஜய்க்கு பதிலாக, புதுச்சேரி கவர்னரின் தனி செயலராக மாணிக்கதீபனும்,புதுச்சேரி கலெக்டர் வல்லவன் கவனித்த அரசு துறைகள்,நிதி செயலர் அசிஷ் மாதோவ்ராவ் மோரே கூடுதலாக கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பினை நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

