ADDED : ஜன 24, 2026 06:20 AM

வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கத்தில் மணிலா சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாய நலத்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியன இணைந்து கரிக்கலாம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் மணிலா சகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாமை நடத்தின.
முகாமிற்கு வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் உயிரியல் துறை வல்லுனர் மணிமேகலை, மணிலா பயிரில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து பேசினார்.
மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரியின் உழவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார், நவீன முறையில் மணிலா சாகுபடி செய்து அதிக லாபம் பெறுவது குறித்து பேசினார்.
ஏற்பாடுகளை கரிக்கலாம்பாக்கம் உழவர் உதவியகம் உதவி வேளாண் அலுவலர் கிருஷ்ணன், செயல் விளக்க உதவியாளர்கள் குமணன் மற்றும் தம்புசாமி ஆகியோர் செய்தனர்.

