/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மன்மோகன் சிங் மறைவு; அரசு சார்பில் அஞ்சலி
/
மன்மோகன் சிங் மறைவு; அரசு சார்பில் அஞ்சலி
ADDED : டிச 28, 2024 06:11 AM

புதுச்சேரி; மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, புதுச்சேரி நகராட்சி கட்டடம் மேரி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அரசு சார்பில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து புதுச்சேரி கவர்னர் மாளிகை, சட்டசபை, ஜிப்மர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தேசியக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்., அலுவலகத்தில் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

