அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 'கிரீன் கார்டு லாட்டரி'யை நிறுத்த உத்தரவு
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 'கிரீன் கார்டு லாட்டரி'யை நிறுத்த உத்தரவு
UPDATED : டிச 20, 2025 03:18 AM
ADDED : டிச 20, 2025 03:17 AM

நியூயார்க்: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், 'டைவர்சிட்டி விசா' எனப்படும், பன்முகத்தன்மை விசா திட்டத்தை நிறுத்தி வைக்க அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரி க்காவில், அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் குடியேற வேண்டும் என்ற நோக்கில், 'டைவர்சிட்டி விசா' திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
இது, 'கிரீன் கார்டு லாட்டரி' என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தகுதியான நாடுகளில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் விசா வழங்கப்படும்.
எந்த நாட்டு மக்கள் குறைவாக அமெரிக்காவில் வசிக்கின்றனரோ, அவர்கள் இந்த லாட்டரியில் பங்கேற்க அனுமதி உண்டு. 2025-ல் மட்டும் இந்த விசாவுக்கு 2 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இத்திட்டத்தை அதிபர் டிரம்ப் நீண்ட காலமாகவே விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், பிரவுன் யூனிவர்சிட்டி மற்றும் எம்.ஐ.டி.,யில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தொடர்ந்து, கிரீன் கார்டு லாட்டரி திட்டத்தை நிறுத்தி வைக்க அதிபர் டிரம்ப் உத்தர விட்டுள்ளார்.
போர் ச்சுக்கலைச் சேர்ந்த கிளாடியோ மானுவல் நெவெஸ் வாலென்டே, 48, என்பவரே இந்த இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இவர், 2000-ம் ஆண்டு மாணவர் விசாவில் நுழைந்து பிரவுன் யூனிவர்சிட்டியில் படித்து, 2017-ல் டைவர்சிட்டி விசா லாட்டரி மூலம் கிரீன் கார்டு பெற்றவர்.
எனவே, அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தனிநபர் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் விதமாக, 'டைவர்சிட்டி விசா' திட்டத்தை நிறுத்த உத்தரவிட்டு உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித் துள்ளது.

