/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மன்மோகன் சிங் மறைவு: கவர்னர், முதல்வர் அஞ்சலி
/
மன்மோகன் சிங் மறைவு: கவர்னர், முதல்வர் அஞ்சலி
ADDED : டிச 29, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு கவர்னர், முதல்வர் அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி குபேர் சாலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, மேரி கட்டட அரங்கில் அவரது உருவப்படத்திற்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அவரது உருவப்படத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்க சாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ., அரசு செயலர் கேசவன், செய்தி விளம்பரத்துறை இயக்குநர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

