தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்ணாடிப்பட்டு நலவழி மையத்திற்கு சிறந்த மருத்துவ சேவைக்கு விருது 

மண்ணாடிப்பட்டு நலவழி மையத்திற்கு சிறந்த மருத்துவ சேவைக்கு விருது 

மண்ணாடிப்பட்டு நலவழி மையத்திற்கு சிறந்த மருத்துவ சேவைக்கு விருது 


ADDED : ஆக 15, 2026 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சுதந்திர தின விழாவில், மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு, முதல்வரின் சிறந்த மருத்துவ பணியாளர்கள் சேவைக்கான விருது வழங்கப்பட்டது. 

புதுச்சேரி, கடற்கரை சாலையில் நடந்த 80வது சுதந்திர தின விழாவில், மருத்துவத்துறையில் சிறந்த விளங்கிய மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு, ‘முதல்வரின் சிறந்த மருத்துவ பணியாளர்கள் சோவைக்கான விருதை’ முதல்வர் ரங்கசாமி, தலைமை மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியனிடம் வழங்கினார். 

விருது பெற்ற மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம், கண், பல், இயன்முறை, ஆயுஷ் மருத்துவத்தை மக்களுக்கு 24 மணி நேரமும் வழங்கி வருகிறது. கடந்த 2024–25ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான காயகல்ப் விருது மற்றும் ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை பெற்றுள்ளது. தேசிய தர உத்தரவாத தரநிலை மதிப்பீட்டில் மாநில அளவில் சான்றளிக்கப்பட்ட மையமாக திகழ்கிறது. 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்துள்ளது. விருது பெற்ற மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மைய பணியாளர்களுக்கு, சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us