sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுமி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய மன்னார்குடி வாலிபர் கைது

/

சிறுமி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய மன்னார்குடி வாலிபர் கைது

சிறுமி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய மன்னார்குடி வாலிபர் கைது

சிறுமி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய மன்னார்குடி வாலிபர் கைது

7


ADDED : ஜன 21, 2025 07:37 AM

Google News

ADDED : ஜன 21, 2025 07:37 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, வீடியோ காலில் நிர்வாணமாக வர சொல்லி மிரட்டிய மன்னார்குடி வாலிபரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்தனர். அவரது மொபைலில் இருந்த ஏராளமான பெண்களின் அந்தரங்க வீடியோக்களை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, நட்பாக பேசி பழகி வந்தனர். சில நாட்களில் காதலிப்பதாக வாலிபர் தெரிவித்தார். அதை சிறுமி ஏற்கவில்லை.

இதனால் கோபமடைந்த வாலிபர், ஆபாசமாக 'மார்பிங்' செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். மேலும், நிர்வாணமாக 'வீடியோ காலில்' பேச வேண்டும் என கூறினார்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறினர். சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான போலீசார், மிரட்டல் விடுத்த வாலிபரிடம் பேச்சு கொடுத்தனர். அந்த வாலிபர் கடலுார் வந்து தன்னை சந்திக்க வேண்டும் இல்லையென்றால் மார்பிங் செய்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மீண்டும் மிரட்டல் விடுத்தார்.

சிறுமி கடலுார் வருவதாக கூற வைத்து போலீசார் காத்திருந்தனர். கடலுார் வந்து இறங்கிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருமாக்கோட்டை, கடைதெருவை சேர்ந்த முஜிப்அலி, 30; என தெரிய வந்தது.

அவரது மொபைல்போனை வாங்கி சோதனை செய்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மொபைல்போனில் 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் திருமணம் ஆன பெண்களிடம், முஜிப்அலி வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றி பேசியதையும், சில பெண்களுடன் உல்லாசமாக இருந்ததையும் வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதுதவிர, 3 மணி நேரம் ஓடக்கூடிய ஏராளமான ஆபாச வீடியோக்களும் இருந்தன.

தொடர் விசாரணையில், டிப்ளமோ மெக்கானிக் முடித்த முஜிப்அலி, கடந்த 2020ம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் மூலம் ஏராளமான பெண்களிடம் நட்பாக பேசி, காதலிப்பதாக கூறி தனது வலையில் விழ வைத்துள்ளார். பின்னர் வீடியோ காலில் நிர்வாணமாக வரவழைத்து அதை பதிவு செய்து அதே பெண்களுக்கு அனுப்பி மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைப்பதும், தேவைப்படும்போது பணம் பெற்று சொகுசாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

அதையடுத்து, முஜிப்அலியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறியதாவது:

கைது செய்யப்பட்டுள்ள முஜிப்அலி, போலி ஐ.டி., மூலம் 10க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம், 5 போலி ஐ.டி., மூலம் பேஸ் புக் பயன்படுத்தி வந்துள்ளார். சிறுமிகள், இளம்பெண்களை குறி வைத்து பழகி, ஆபாசமாக மார்பிங் செய்த புகைப்படங்களை அனுப்பி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பணம் பறித்து வந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். நிர்வாணமாக வீடியோ கால் செய்வது, போட்டோ எடுப்பது பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, இவற்றை தவிர்க்க வேண்டும்.

சமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக வேண்டாம். சமூக வலைதளங்களில் மிரட்டல் வந்தால், சைபர் கிரைம் போலீசின் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us