/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை மேம்பாட்டு பணி துவக்கம்
/
மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை மேம்பாட்டு பணி துவக்கம்
மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை மேம்பாட்டு பணி துவக்கம்
மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை மேம்பாட்டு பணி துவக்கம்
ADDED : அக் 01, 2024 06:28 AM

புதுச்சேரி: மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை உட்பட ரூ. 7.03 கோடி மதிப்பில் சாலை வாய்க்கால் மேம்படுத்தும் பணிகளை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் தொகுதியில், ரூ. 2.58 கோடி மதிப்பில் வடிகால் வாய்க்கால், மரப்பாலம் முதல் தேங்காய்திட்டு மேட்டுத்தெரு வரை ரூ.2.20 கோடி மதிப்பில் சாலை, மரப்பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் சந்திப்பு வரை ரூ.2.25 கோடி மதிப்பில் சாலையின் இருபக்கம் 'யு' வடிவ வாய்க்கால், மின்கம்பங்களை அகற்றி புதைவட கேபிள் பதித்து, சாலையை மேம்படுத்தப்பட உள்ளது. இப்பணிகளை முதல்வர் ரங்கசாமி நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சம்பத், தலைமை பொறியாளர் தீனதயாளன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.