/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரோவில்லில் 16ல் மாரத்தான்; 2,664 பேர் இதுவரை பதிவு
/
ஆரோவில்லில் 16ல் மாரத்தான்; 2,664 பேர் இதுவரை பதிவு
ஆரோவில்லில் 16ல் மாரத்தான்; 2,664 பேர் இதுவரை பதிவு
ஆரோவில்லில் 16ல் மாரத்தான்; 2,664 பேர் இதுவரை பதிவு
ADDED : பிப் 13, 2025 07:29 AM
வானுார்; ஆரோவில்லில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ள மாரத்தான் ஓட்டத்திற்கு, 2,664 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மனித ஒற்றுமை, உடல் வலிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாரத்தான் ஓட்டம், 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., என 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில் வெளிநாட்டினர் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பர்.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் முன்பதிவு செய்வோர் மட்டுமே பங்கேற்க முடியும். அதன்படி வரும் 16ம் தேதி நடைபெற உள்ள 15வது ஆண்டு மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆரோவில் மாரத்தான் இணையத்தில் துவங்கியது.
இதன் படி 42 கி.மீட்டருக்கு 8 பெண்கள் உட்பட 100 பேரும், 21 கி.மீட்டருக்கு 145, 858 ஆண்கள் என 1004 பேரும், 10 கி.மீட்டருக்கு 474 பெண்கள், 1083 ஆண்கள் என 1,560 பேர் என மொத்தம் 2,664 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

