ADDED : செப் 23, 2026 06:06 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வளர்கலை கூடத்தில் நடந்து வரும் ஓவியக்கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்த கலைமாமணி ஓவியர் குபேந்திரன் வரைந்த சால்ட் என்ற தலைப்பில் கடல்சார்ந்த ஓவிய கண்காட்சி புதுச்சேரி வளர்கலை கூடத்தில் கடந்த 19ம் தேதி துவங்கியது.
கண்காட்சியினை முன்னாள் கலைப்பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள் துவக்கி வைத்தார்.
வரும் 25ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் ஓவியர் குபேந்திரனின் கடல் மற்றும் கடல் மீன்களை மையப்படுத்திய ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரும்பினால் செய்யப்பட்ட சிற்பங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியினை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். நிறைவு விழா அன்று நாடக நிகழ்ச்சி நடக்கிறது.
