ADDED : ஜன 30, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் இன்டர் நேஷனல் வி.ஆர்.எஸ்., அகாடமி சார்பில் தற்காப்பு கலை பயிற்சி முகாம் நடந்தது.
காரைக்கால் ஜாப்பனீஸ் கோஜுரியு ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேசன் மற்றும் இன்டர் நேஷனல் வி.ஆர்.எஸ்., மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் தற்காப்பு கலை பயிற்சி முகாம் நடந்தது.
வி.ஆர்.எஸ்., நிறுவனர் குமார் தலைமையில் நடைபெற்ற முகாமில், தற்காப்பு கலை குறித்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கொரிய கிராண்ட் மாஸ்டர் ஜியோங்கி லீ முன்னிலையில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிற்சி முகாமில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
கராத்தே மாஸ்டர்கள் திருவாரூர் செல்ல பாண்டியன்,கடலூர் சென்சாய் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

