/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மாசிமகம் தீர்த்தவாரி: போக்குவரத்து மாற்றம்
/
புதுச்சேரியில் மாசிமகம் தீர்த்தவாரி: போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரியில் மாசிமகம் தீர்த்தவாரி: போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரியில் மாசிமகம் தீர்த்தவாரி: போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 23, 2024 03:38 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மாசிமகம் தீர்த்தவாரியை முன்னிட்டு நாளை நகரப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து எஸ்.பி., செல்வம் அறிவிப்பு:
புதுச்சேரியில் நாளை (24ம் தேதி) மாசிமகம் தீர்த்தவாரி வைத்திக்குப்பம் கடற்கரை பகுதியில் நடக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரி நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொது மக்களின் வசதிக்காகவும் நகரின் பிரதான சாலைகளில் நாளை காலை 8:00 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில், அஜந்தா சந்திப்பில் இருந்து ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு வரை இருசக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து வித வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. எனவே, காலாப்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு இ.சி.ஆரில் வரும் அனைத்து வகை வாகனங்களும் சிவாஜி சதுக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
புதிய பஸ் நிலையத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாக சென்னை இ.சி. ஆரில் செல்லும் பஸ்கள் அனைத்தும் வெங்கடசுப்பா சிலையில் வலதுபுறம் திரும்பி, மறைமலை அடிகள் சாலை வழியாக நெல்லிதோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜிவ் காந்தி சதுக்கம், சிவாஜி சிலை வழியாக சென்னை செல்ல வேண்டும்.
மகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை செஞ்சி சாலையில் இருந்து செயின்ட் லுாயி வீதி வரை இடையே உள்ள பெருமாள் கோயில் வீதி, வெல்காம் வீதி, லல்லி தொலாந்தல் வீதி, ரிச்மோண்ட் வீதி, துபே வீதி மற்றும் செயின்ட் கில் வீதிகளின் தெற்கு பகுதியில் மட்டும் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
மிஷன் வீதியில் இருந்து ஆம்பூர் சாலை வரை உள்ள பெருமாள் கோவில் வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி மற்றும் அரவிந்தர் வீதிகளில் தெற்கு பக்கமாக மட்டும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.