/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி துவக்கம்
/
புதுச்சேரியில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி துவக்கம்
புதுச்சேரியில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி துவக்கம்
புதுச்சேரியில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி துவக்கம்
ADDED : ஜன 30, 2024 06:27 AM

புதுச்சேரி, : கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் இணைந்து நடத்தும், புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான, 'மாஸ்டர்ஸ் பத்து ஓவர்' கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.
இந்த போட்டியை, கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரியின் முன்னாள் செயலாளர் சந்திரன் தலைமையில் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரியின் கவுரவ செயலாளர் ராமதாஸ் துவக்கி வைத்தார்.
நேற்று முன்தினம் துவங்கிய முதல் போட்டியில், புதுச்சேரி வடக்கு அணியும், மாகி அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மாகி அணி, 10 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து, 65 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி வடக்கு அணியை சேர்ந்த பசுபதி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புதுச்சேரி வடக்கு அணி, 7.2 ஓவர்களிலேயே, 2 விக்கெட்டுகளை இழந்து, 67 ரன்கள் அடித்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வடக்கு அணியின் சைஜு டைட்டஸ் 26 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அடுத்து நடந்த போட்டியில், காரைக்கால் மற்றும் புதுச்சேரி மேற்கு அணிகள் களம் கண்டன. இதில் புதுச்சேரி மேற்கு அணி, 10 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து, 87 ரன்கள் எடுத்தது.
காரைக்கால் அணி, 10 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து, 74 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில், புதுச்சேரி மேற்கு அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் 15 பந்துகளில், 20 ரன்கள் அடித்து, 2 விக்கெட்டுகள் வீழ்த்திய, புதுச்சேரி மேற்கு அணியின் ராஜ்கண்ணு ஆட்ட நாயகன் விருது வென்றார்.
மதியம் 2:15 மணிக்கு நடந்த போட்டியில், ஏனாம் மற்றும் புதுச்சேரி தெற்கு அணிகள் மோதின. முதலில் ஆடிய ஏனாம் அணி 10 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, 51 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து ஆடிய புதுச்சேரி தெற்கு அணி, 5.4 ஓவர்களில், 1 விக்கெட் மட்டுமே இழந்து, 52 ரன்களை அடித்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டியில் புதுச்சேரி தெற்கு அணியின் ரமேஷ், 15 ரன்கள் அடித்து, 2 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.