/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தெற்கு அணி சாம்பியன்
/
மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தெற்கு அணி சாம்பியன்
மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தெற்கு அணி சாம்பியன்
மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தெற்கு அணி சாம்பியன்
ADDED : பிப் 08, 2024 05:10 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த மாவட்ட அளவிலான மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியில், தெற்கு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புதுச்சேரியில், மாவட்டங்களுக்கு இடையிலான, மாஸ்டர்ஸ், 10 ஓவர் கிரிக்கெட் இறுதி போட்டி நேற்று நடந்தது. புதுச்சேரி மேற்கு மற்றும் தெற்கு அணிகள் மோதின. முதலில் ஆடிய புதுச்சேரி மேற்கு அணி, 10 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழந்து 120 ரன்கள் குவித்தது. மேற்கு அணியின் ஜெயக்குமார் 23 பந்துகளில் 54 ரன், ராஜா 19 பந்துகளில் 39 ரன் எடுத்தனர்.
அடுத்து ஆடிய தெற்கு அணி, கடைசி ஓவரின் கடைசி பந்தில், பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. 2 விக்கெட்டுகள் இழந்து, 124 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தெற்கு அணியின் ராகேஷ், 25 பந்துகளில் 54 ரன், பார்த்திபன் 22 பந்துகளில் 40 ரன் எடுத்தனர். இந்த அணியின் பார்த்திபன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில், கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரியின் தலைவர் தாமோதரன், ஜம்மு - காஷ்மீர் மாகாணத்தின் கிரிக்கெட் அசோசியேஷன் உறுப்பினர் அணில் குப்தா, கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரியின் முன்னாள் செயலாளர் சந்திரன், முன்னாள் இணை செயலாளர் வெங்கடராமன், செயலாளர் ராமதாஸ் மற்றும் சி.இ.ஓ., வாசன் ராஜ் ஆகியோர் சாம்பியன் கோப்பையை வழங்கினர்.
தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருதை புதுச்சேரி மேற்கு அணியின் ராஜா, சிறந்த பவுலர் மற்றும் ஆட்டக்காரர் விருதை தெற்கு அணியின் ராகேஷ் பெற்றனர்.

