/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்ற எம்.பி.பி.எஸ்., மாணவர் கைது ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
/
கஞ்சா விற்ற எம்.பி.பி.எஸ்., மாணவர் கைது ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா விற்ற எம்.பி.பி.எஸ்., மாணவர் கைது ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா விற்ற எம்.பி.பி.எஸ்., மாணவர் கைது ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஜன 03, 2026 05:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி அருகே கஞ்சா விற்ற எம்.பி.பி.எஸ்., மாணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே.நகர், வாலிபால் மைதானம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், அங்கு நின்றிருந்த வாலிபர் ராயல் என்பீல்டு புல்லட்டில் தப்பிச் செல்ல முயன்றார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில், 1,460 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர் டில்லி, பதர்பூர், விஸ்வகர்மா காலனியை சேர்ந்த விகாஸ் விஜ் மகன் லக் ஷ்யவிஜ்,21; என்பதும், அவர் தற்போது தவளக்குப்பம், நல்லவாடு சாலை, சப்தகிரி நகரில் தங்கி, கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மூன்றாம் ஆண்டு படித்து வருவதும், வெளியில் கஞ்சா வாங்கி பு கைத்து வந்தவர், பின்னர் அவரே அசாம் மாநிலத்தில் கஞ்சாவை வாங்கி, அஞ்சல் துறை பார்சலில் புதுச்சேரியில் தான் தங்கியிருக்கும் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைப்பதும், அவ்வாறு வரும் பார்சல்களை அரியாங்குப்பம் அஞ்சல் அலுவலகத்தில் நேரில் சென்று வாங்கிச் சென்று, பார்சலை பிரித்து கஞ்சாவை சிறு வியாபாரிகளுக்கு விற்று லாபம் சம்பாதித்து வந்தார்.
அவ்வாறு நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வியாபாரிகளுக்கு கஞ்சா விற்க காத்திருந்தபோது, போலீசில் சிக்கியது தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, மருத்துவ மாணவர் லக் ஷயவிஜ்யை கைது செய்து, நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள 1,460 கிராம் கஞ்சா மற்றும் ராயல் என்பீல்டு புல்லட்டையும் பறிமுதல் செய்தனர்.
எம்.பி.பி.எஸ்., மாணவர், கஞ்சா விற்பனை செய்த சம்பவம், பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

