தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதைப் பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: கவர்னர் தமிழிசை உறுதி

போதைப் பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: கவர்னர் தமிழிசை உறுதி

போதைப் பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: கவர்னர் தமிழிசை உறுதி


ADDED : மார் 12, 2024 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில், புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் தொலைநிலை மனநல ஆலோசனை மையம் நேற்று துவக்கப்பட்டது.

கவர்னர் தமிழிசை துவங்கி வைத்தார். சுகாதாரத்துறைச் செயலர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமலு, மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

பின் கவர்னர் தமிழிசை கூறியதாவது:

இந்த மனநல மையம் 24 மணி நேரமும் செயல்படும்.14416 எண்ணை தொடர்பு கொண்டால் அறிவுரைகள் வழங்குவர். போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வரவேண்டும் என்பதற்காகஇந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். இதோடு 14 படுக்கையோடு மறுவாழ்வு மையமும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

கேரம் போர்டு போன்ற விளையாட்டும் நுாலகமும் அங்கே அமைக்கப்படுகிறது. போதையின் மூலம் பாதை மாறக்கூடாது என்பதற்காக இது துவங்கப்பட்டிருக்கிறது. ரூ. 50 லட்சம் செலவில் மூன்று வாரங்களுக்குள் இன்னும் விரிவுபடுத்தப்பட்ட மறுவாழ்வு மையமாக மாறும்.எல்லா வகையிலும் போதைப் பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி எந்த விதத்திலும் போதையால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்கு நாம் உறுதியாக இருக்க வேண்டும். விளையாட்டு, நுாலகம் போன்றவைகளும் இதில் இணைக்கப்பட்டிருக்கிறது. . எல்லா விதங்களிலும் மக்களோடு நாம் இருக்கிறோம். போதைப் பொருள்கள் கட்டுப்படுத்த எல்லா விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கவர்னர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us