
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், துவக்கி வைத்தார்.
உப்பளம் அடுத்த, வாண்ரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் முகாமை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மருத்துவர் பிரபாகரன், தொகுதி தலைவர் சவுரி, மாநில இணை செயலாளர் வீரம்மாள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.