ADDED : அக் 22, 2024 05:44 AM

புதுச்சேரி: ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், சென்னை எம்.ஜி.எம். புற்றுநோய் நிறுவனம் மூலம் தொடர் மருத்துவக் கல்வி விழிப்புணர்வு பயிலரங்கம் நேற்று நடந்தது.
மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் வரவேற்றார். புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் பாலாஜி ரமணி 'மகப்பேறு மருத்துவ புற்றுநோயியல் துறையின் தற்போதிய நிலை' குறித்து பேசினார்.
மார்பக புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் கீர்த்தி கேத்ரின் கபீர் 'மார்பக புற்றுநோயில் குறைவானது அதிகம்' என்ற தலைப்பில் பேசினார்.
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ துறை தலைவர் டாக்டர் வல்சா டயானா நன்றி கூறினார்.
மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் ரொசாரியா, மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத், அனைத்து துறை தலைவர்கள், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

