/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு
/
அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு
ADDED : ஜன 28, 2026 05:59 AM

புதுச்சேரி: புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடந்த, நிகழ்ச்சியை, மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் துவக்கி வைத்தார்.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை எம்.ஜி.எம். ெஹல்த் கேர் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் சஞ்ஜய் தியோடர், செயற்கை இதய வால்வுகளும், அதன் வளர்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷர்தன் சர்மா, குறை தீர்ப்பு அதிகாரி ரவி உட்பட மருத்துவ நிபுணர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

