/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு துவங்கியது
/
குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு துவங்கியது
குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு துவங்கியது
குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு துவங்கியது
ADDED : பிப் 12, 2025 03:59 AM

புதுச்சேரி :  புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் முறைகள் மற்றும் அதன் விழிப்புணர்வு பற்றிய மூன்று நாள் மருத்துவ கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
சுகாதார துறை இயக்குநர் ரவிச்சந்திரன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். துணை இயக்கு நர்கள் ரகுநாதன், ராஜாம்பாள் முன்னிலை வகித்தனர்.
அரசு மருத்துவமனைக்கு வரும் குழந்தை களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறைகள் மற்றும் ஊசியின் தன்மைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்து, மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் மற்றும் டாக்டர்கள் விளக்கினர்.
டில்லி, சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, உலக சுகாதார நிறுவன உறுப்பினர்களான டாக்டர்கள் மோனோசோப்ரா, ஆஷா ராகவன், சாய்ராபானு உட்பட பலர் பங்கேற்றனர்.