ADDED : மார் 29, 2026 04:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கல்லுாரிக்கு சென்ற மாணவர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா, 26; இவர் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் எம்.டி., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் கல்லுாரிக்கும் செல்லவில்லை, வீட்டிற்கு வரவில்லை.
இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

