தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதை பொருட்கள் தடுப்பது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம்

போதை பொருட்கள் தடுப்பது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம்

போதை பொருட்கள் தடுப்பது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம்


ADDED : செப் 25, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 09:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில், தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் புகையிலை பொருட்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, கடலோர காவல் படை, மீன் வளத்துறையில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  காவல்துறை சார்பில், பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைக்காலில் பெத்தமைட்டன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வித்துறை மூலம் போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

காவல்துறை சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கடலோரப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us