தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறப்பு சமரச முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்

சிறப்பு சமரச முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்

சிறப்பு சமரச முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 25, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ‘சமரச முனைப்பு  இயக்கம் 3.0’ சிறப்பு சமரச முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடந்தது.

இந்தியா முழுதும் 4 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணும் நோக்கில், அடுத்த மூன்று மாதங்களுக்கு ‘மீடியேஷன் 3.0’ என்ற பெயரில் சிறப்பு முகாம் வரும் அக்டோபர் 1ம் தேதி துவங்கி டிசம்பர் 31ம் தேதி வரை 90 நாட்கள் நடைபெறுகிறது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசத்தின் அடிப்படையில் தீர்வு காண்பதே இந்த முகாமின் முக்கிய நோக்கம்.

இதில் உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் தொழிலாளர் இழப்பீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்டவற்றுக்கு சமரச முறையில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் மாவட்ட நீதிபதி அம்பிகா மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் குழுவின் செயலாளர் ரமேஷ் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

அண்ணா சிலையிலிருந்து தொடங்கிய ஊர்வலம், பழைய நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காண விரும்புபவர்கள், மாவட்ட அல்லது தாலுகா நீதிமன்றங்களை அணுகி பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us