/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலோர காவல்படை கமாண்டர் ரங்கசாமியுடன் சந்திப்பு
/
கடலோர காவல்படை கமாண்டர் ரங்கசாமியுடன் சந்திப்பு
ADDED : பிப் 28, 2024 07:19 AM

புதுச்சேரி : இந்திய கடலோர காவல்படை கமாண்டர், முதல்வர் ரங்கசாமியுடன் சந்தித்து பேசினார்.
இந்திய கடலோர காவல்படையின் புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதி கமாண்டராக டி.ஐ.ஜி., எஸ்.எஸ். டஸிலா சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் நேற்று, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது, புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதிகளான விழுப்புரம், புதுச்சேரி, கடலுார், நாகப்பட்டினம், காரைக்கால் கடலோர பாதுகாப்பு குறித்தும், புதுச்சேரியில் புதியதாக அமைய உள்ள கடலோர காவல்படையின் கட்டமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்பின்போது, சபாநாயகர் செல்வம் உடனிருந்தார்.

