/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குறு, சிறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு மத்திய அமைச்சரின் செயலருடன் சந்திப்பு

ADDED : ஜூலை 25, 2025 02:31 AM

புதுச்சேரி: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு சங்கம் சார்பில், தொழிற்சாலைகளின் வளர்ச்சி தொடர்பாக மத்திய அமைச்சரின், செயலரை சந்தித்து பேசினர்.
அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு சங்கமாக திகழும் (லகு உத்யோக் பாரதி) புதுச்சேரி கிளையின் பொருளாளர் சுரேஷ் பாபு டில்லி சென்றார்.
துறை சார்பில், மத்திய அமைச்சரின், செயலர் கோவிந்த்மோகனை சந்தித்து பேசினார்.
அதில், புதுச்சேரி தொழிற் சாலைகள் வளர்ச்சிக்கும், தொழிலாளர்கள் திறன் மேம்பாடு, புதிய தொழிற்சாலை தொடங்குபவர்களுக்கு, உரிமம் மற்றும் அரசு மானியம் ஆகியவை உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும்.
தொழிற்பேட்டை மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கடிதம் கொடுத்து, செயலரிடம் பேசினார்.
இது தொடர்பாக, பரிசீலனை செய்வதாக செயலர் தெரிவித்தார்.