துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டல்: விசிக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்
துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டல்: விசிக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்
UPDATED : ஆக 26, 2025 02:29 PM
ADDED : ஆக 26, 2025 02:05 PM

சென்னை: துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டிய விசிக துணைச் செயலாளர் எஸ்.கே.குமார் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
திருவள்ளூர், நுங்கம்பாக்கத்தில் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், கடந்த 17ம் தேதி மாமூல் கேட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட விசிக துணைச் செயலாளர் எஸ்.கே.குமார் மிரட்டி உள்ளார். இது குறித்து தொழிற்சாலையின் நிர்வாகி விஸ்வநாதன் போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். தற்போது மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில், எஸ்.கே.குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதற்கிடையே தொழிற்சாலை ஊழியரை வெளியே வரவழைத்து எஸ்.கே.குமார் மாமூல் கேட்டு மிரட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதேபோல் திருவாரூரில் பர்னிச்சர் கடையில் பொதுக்கூட்டத்திற்கு, பணம் கேட்டு மிரட்டும், விசிக நிர்வாகியின் வீடியோ வெளியாகி உள்ளது.