ADDED : அக் 25, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் புறவழிச்சாலை புதிய பாலம் அருகே மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. பைக்கில் செல்பவர்கள் அங்குள்ள பள்ளத்தில், பைக் சக்கரம் இறங்கும் போது, பின்புறமாக உட்கார்ந்து செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
மேலும், புதிய பாலத்தின் சைடு பகுதியில், சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. பள்ளிக்கு செல்லும் பெற்றோர், பைக்கில் வேகமாக செல்லும் போது, பாலம் அருகே பள்ளம் இருப்பது தெரியாமல், திடீரென பிரேக் அடிப்பதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது.
பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

