/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரியில் நாளை மெகா வேலைவாய்ப்பு முகாம்

ADDED : பிப் 17, 2024 04:59 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பக இயக்குனர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி அரசு தொழிலா ளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் நாளை (18ம் தேதி) லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மெகா வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இந்த முகாமில் 2500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 50 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங், கலைப்படிப்புகள், பார்மசி, நர்சிங், வணிகம், அறிவியல், கல்வியியல், எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை பட்ட படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் 10 ரெஸ்யூம் மற்றும் கல்வி தகுதிக்கான அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.