/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாறடி ரோடு மேம்பாலத்தில் மீண்டும் மெகா சைஸ் பள்ளம்
/
நுாறடி ரோடு மேம்பாலத்தில் மீண்டும் மெகா சைஸ் பள்ளம்
நுாறடி ரோடு மேம்பாலத்தில் மீண்டும் மெகா சைஸ் பள்ளம்
நுாறடி ரோடு மேம்பாலத்தில் மீண்டும் மெகா சைஸ் பள்ளம்
ADDED : டிச 06, 2024 06:50 AM

புதுச்சேரி : நுாறடி ரோடு மேம்பாலத்தில் மீண்டும் சாலையில் கான்கிரீட் தளர்ந்து மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதுச்சேரி நுாறடி ரயில்வே பாலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளை மிரட்டியது. பாலத்தின் மேல் சிமென்ட் ஜால்லிகள் அடிக்கடி பெயர்ந்து இரும்பு கம்பிகள் ஆபத்தாக வெளியே தெரிவதும், அதன் பிறகு தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அதை பேட்ஜ் ஒர்க் செய்வதும் வாடிக்கையானது.
100 அடி ரோடு மேம்பாலத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை ராட்சத பள்ளம் தோன்றி அச்சுறுத்தியது. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை உயரதிகாரிகள் பள்ளத்தை சிமென்ட் கலவை கொண்டு பேட்ஜ் ஒர்க் செய்தனர்.
இப்போது மீண்டும் அதே இடத்தில் சிமென்ட் கலவை காணாமல்போய் இரும்பு கம்பிகள் மட்டும் ஆபத்தாக வெளியே தெரிகிறது.
பாலத்தை கடக்கும் பைக் ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவில் இப்பள்ளம் உயிர்பலியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. பைக் ஓட்டிகள் மரண பீதியில் கடக்கின்றனர். பொதுப்பணித்துறை பாலத்தில் பள்ளத்தை சரி செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.