/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சரிடம் புகார் கொடுத்த கான்ஸ்டபிளுக்கு 'மெமோ'
/
அமைச்சரிடம் புகார் கொடுத்த கான்ஸ்டபிளுக்கு 'மெமோ'
ADDED : செப் 22, 2024 01:56 AM
போலீஸ் மோட்டார் வாகன பிரிவில் 108 டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர். டெக்னிக்கல் அதிகாரிகள் இல்லாததால், வாகனங்களை பராமரிப்பது, பணி ஒதுக்கீடுகள் சரியான முறையில் இல்லாததால், பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள சீனியர் டிரைவர்கள் மன உளைச்சலில் இருப்பதாக கடந்த ஜூலை மாதம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதனால் கடுப்பான எஸ்.பி., புகார் கொடுத்த ஒரு சீனியர் டிரைவருக்கு, நீங்கள் அதிக நாட்கள் விடுமுறை எடுத்துள்ளீர்கள் என கூறி 'மெமோ' கொடுத்தார். உள்துறை அமைச்சரிடம் புகார் கொடுத்ததால், தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதால், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக பி.ஓ.பி.,யில் சம்பந்தப்பட்ட சீனியர் டிரைவர் புகார் அளித்தார். இது தொடர்பாக இரு தரப்பையும் அழைத்து உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.