/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினம்
/
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினம்
ADDED : டிச 31, 2024 06:09 AM

திருபுவனை: மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுசார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 11ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குவிவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவி, துணை தலைவர்கள் ராமக்கிருஷ்ணன், பாஸ்கரன், துணை செயலாளர்கள் ஆதிமூலம் பழனி, வேதபுரி இயற்கை விவசாயிகள் சங்க தொகுதி தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் ஜெயராமன் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் ரவி உறுதிமொழி வாசிக்க விவசாயிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பகுதி செயலாளர்கள் ராமமூர்த்தி, ராஜாராமன், திருமால், செல்வி,கவுதம், மகாலிங்கம், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொதுமக்களுக்கு இயற்கை உணவாக நாட்டு சர்க்கரை கலந்த அவல் மற்றும் இயற்கை தேநீர் வழங்கப்பட்டது.