sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனநல விழிப்புணர்வு விழா

/

மனநல விழிப்புணர்வு விழா

மனநல விழிப்புணர்வு விழா

மனநல விழிப்புணர்வு விழா


ADDED : அக் 22, 2024 06:08 AM

Google News

ADDED : அக் 22, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரியாங்குப்பம் அடுத்த மணவெளி அரிச்சுவடி மனநல மையம் சார்பில், உலக மனநல விழிப்புணர்வு மாதவிழா புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.

சபாநாயகர் செல்வம், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

எம்.எல்.ஏ., க்கள் பாஸ்கர், அசோக்பாபு ஆகியோர் யோகா, ஓவியம் வரைதல், கேரம், செஸ் போட்டிகளை துவக்கி வைத்தனர். மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

விழாவில் டாக்டர்கள் ரத்தின ஜனார்த்தனன், அசோகன், அரவிந்தன், ரகுராமன், கலைச்சந்திரன், கார்த்திக்கேயன், நவசக்தி, தீபா, சுந்தரேஸ்வரன், நரேஷ்பாபு, கலையரசி, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரன்சி சிட்டியின் முன்னாள் தலைவர் சதீஷ்குமார் கருத்துரை வழங்கினர்.

திரைப்பட நடிகர் முருகதாஸ், ஸ்டன்ட் இயக்குனர் பிரசன்னா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் விஜய் முருகன், டாக்டர்கள் அருண்குமார், ஆர்த்தி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

அரிச்சுவடி மனநல இயக்குனர் இளவழகன், ஆத்திச்சுவடி பள்ளி தாளாளர் சத்தியவண்ணன், அரிச்சுவடி டிரஸ்ட் அரசமாதேவி சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தனர்.

குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கோயம்புத்துார், கடலுார், கோபிசெட்டிப்பாளையம், சென்னை பகுதி பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், அரிச்சுவடி மனநல உள்நோயாளிகள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை அரிச்சுவடி, ஆத்திச்சுவடி ஊழியர்கள் செய்திருந்தனர்.சத்தியவண்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us