/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் கடலுார், புதுச்சேரியில் நாளை ஆலோசனை
/
மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் கடலுார், புதுச்சேரியில் நாளை ஆலோசனை
மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் கடலுார், புதுச்சேரியில் நாளை ஆலோசனை
மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் கடலுார், புதுச்சேரியில் நாளை ஆலோசனை
ADDED : பிப் 21, 2025 05:13 AM
புதுச்சேரி: மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் மற்றும் இருதயவியல் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கடலுார், புதுச்சேரியில் நாளை ஆலோசனை வழங்க உள்ளனர்.
சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், சிறுநீரகவியல் நிபுணர் சஞ்சு உன்னிகிருஷ்ணன், இருதயவியல் நிபுணர் மணிகண்டன் ஆகியோர் நாளை (22ம் தேதி) கடலுார் ஆற்காட் மருத்துவமனையில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.
தொடர்ந்து இருவரும், புதுச்சேரி, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனைக்கு வந்து நாளை மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை ஆலோசனை வழங்க உள்ளனர்.
சிறுநீரகவியல் துறை டாக்டர் சஞ்சு உன்னிகிருஷ்ணன், சிறுநீரக கல், புரோஸ்டெட் கோளாறுகள், மாற்று அறுவை சிகிச்சை, பெண் சிறுநீரகவியல், ஆண்குறி துளை பிறழ்வு, சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கோலா நிறத்தில் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, சிறுநீர் பாதை கோளாறுகள், சிறுநீரக பகுதியில் வலி, விதைப்பையில் வலி, வீக்கம், அடிக்கடிநீர் கழித்தல், உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
இருதயவியல் நிபுணர் மணிகண்டன், நெஞ்சில் வலி அல்லது அசவுகரியம், வியர்த்தல், களைப்பு, கை, தாடை, கழுத்தில் வலி, மூச்சு விடுவதில் சிரமம், ஒழுங்கற்ற இதய துடிப்பு, கால்களில் வீக்கம், இனம் புரியாத உணர்வு இழப்பு, குடும்ப வரலாற்றில் யாருக்கேனும் இருதய நோய், அதிக ரத்த அழுத்தம், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சையும், ஆலோசனையும் வழங்க உள்ளார்.
மருத்துவ முகாமிற்கு வரும்போது முந்தைய மருத்துவ பதிவுகள் இருந்தால் அவசியம் கொண்டு வர வேண்டும். முன்பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம்-500 ரூபாய். முன்பதிவுக்கு 75400 44741 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.