/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் நுண்ணுயிரியல் தினம்
/
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் நுண்ணுயிரியல் தினம்
ADDED : செப் 20, 2024 03:32 AM

வில்லியனுார்: அரியூர், வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் அறிவியல் கல்லுாரியில் சர்வதேச நுண்ணுயிர் மற்றும் நுண்ணுயிரியல் தினம் எம்.எல்.டி., துறை சார்பில் கொண்டாடப்பட்டது.
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி கல்வி ஆலோசகர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். பாராமெடிக்கல் கல்லுாரி முதல்வர் ஆனந்த வைரவேல் முன்னிலை வகித்தார். கல்லுாரி உதவி பேராசிரியை அஸ்வினி வரவேற்றார். உதவி பேராசிரியை சிலம்பரசி, விருந்தினர் அறிமுக உரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை எம்.எம்.எம்., சுகாதார அறிவியல் கல்லுாரியின் நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியர் பாரதி பங்கேற்று பேசினார்.
முன்னதாக கல்லுாரி வளாகத்தில் நுண்ணுயிரியல் கண்காட்சி வைக்கப்பட்டது. வினாடி - வினா மற்றும் ஓவியப் போட்டி நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் விஜய்ஆனந்த் நன்றி கூறினார்.