/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்னை மரங்களுக்கு நுண்ணுாட்ட சத்து பயிற்சி
/
தென்னை மரங்களுக்கு நுண்ணுாட்ட சத்து பயிற்சி
ADDED : ஜன 17, 2026 05:22 AM

பாகூர்: சேலியமேடு கிராமத்தில் தென்னை மரங்களுக்கு, வேர் மூலமாக நுண்ணுாட்ட சத்துக்கள் அளிக்கும் முறை குறித்து, செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதி ஆண்டு வேளாண் மாணவிகள், பாகூரில் ஊரக வேளாண் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பயிற்சி முகாம், கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின், ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோர் தலைமையின் கீழ் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சேலியமேடு கிராமத்தில் விவசாயி வெங்கடாஜலபதி வயலில், தென்னை மரத்திற்கு வேர் மூலமாக நுண்ணுாட்ட சத்து அளிக்கும் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் அலுவலர் பரமநாதன் ஆலோசனை படி நடந்த நிகழ்ச்சியில், மாணவிகள் சபீனா பர்வீன், சுபஹரிணி, சுபிக்ஷா, சுஜித்ரா, சொர்ணலட்சுமி, துளசி, வைஷ்ணவி, வினோதினி, விருட்சிகா, யஷ்வஸ்ரீ, யுகபாரதி உள்ளிட்டோர் தென்னை மரங்களுக்கு வேர் மூலமாக நுண்ணுாட்ட சத்துக்களை அளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

