/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்ட்டோ பார்களில் நள்ளிரவில் ஆய்வு
/
ரெஸ்ட்டோ பார்களில் நள்ளிரவில் ஆய்வு
ADDED : ஆக 17, 2025 03:40 AM

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ரெஸ்ட்டோ பார்களில் கலால்துறை தாசில்தார் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி, மிஷன் வீதியில் ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பாரில் கடந்த சில தினங்கள் முன்பு சிவகங்கையை சேர்ந்த மோஷித் சண்முகபிரியன் (22) என்ற கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி செயல்பட்ட 13 ரெஸ்டோ பார்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக, புதுச்சேரியில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனிடையே புதுச்சேரி நகரப்பகுதிகளில் உள்ள ரெஸ்டோ பார்களில் நேற்று நள்ளிரவு கலால்துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா மற்றும் கிழக்குப் பகுதி போலீஸ் எஸ்.பி., இஷா சிங், பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, பார்களில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை செய்ய கூடாது. மதுக்கடைகளில் நேரத்தை குறிக்கும் வகையில் பெரிய சைஸ் போர்டு பார்வையாளர்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும் என, உத்தவிடப்பட்டது.