
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : சுயம்பு சிவனாண்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி, பால் குட ஊர்வலம் நடந்தது.
தவளக்குப்பம் அடுத்த சிவனார்புரத்தில் சுயம்பு சிவனாண்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் 11ம் ஆண்டு மயானக்கொள்ளை பிரமோற்சவ விழா 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரண்டாம் நாள் நிகழ்வான, நேற்று முன்தினம் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று மாலை அம்மன் வீதியுலா நடந்தது. நாளை மாலை மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது.

