நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் எல்லை மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் எல்லை முத்துமாரியம்மன் கோவில் 47ம் ஆண்டு, செடல் விழாவையொட்டி, நேற்று பக்தர்கள் பால் குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று 7ம் தேதி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான நாளை செடல் விழா நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 15ம் தேதி ஊஞ்சல் உற்வசம் நடக்கிறது.