தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்தாலம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

 முத்தாலம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

 முத்தாலம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


ADDED : பிப் 28, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் முத்தாலம்மன் கோவிலில், பால்குட ஊர்வலம் நடந்தது.

உலக அமைதி வேண்டி பாகூர் முத்தாலம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கலச ஸ்தாபனம் செய்து, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. நேற்று காலை விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், 108 சங்கு ஸ்தாபனம், முத்தாலம்மன் மூலமந்திர ேஹாமம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் துவங்கியது.

100க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடங்களை தலையில் சுமந்து மாட வீதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின், அம்மனுக்கு பாலாபிேஷகம், 108 சங்காபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us