/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் வீடுதோறும் மினரல் வாட்டர்
/
புதுச்சேரியில் வீடுதோறும் மினரல் வாட்டர்
ADDED : செப் 10, 2025 03:41 AM

புதுச்சேரி:புதுச்சேரி, உருளையன்பேட்டையில் செப்., 7ம் தேதி, கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, 3 பேர் இறந்தனர். இதனால் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள், நேற்று முத்தரையர்பாளையத்தில் இருந்து வரும் குடிநீர் குழாய்களை ஐந்து இடங்களில் தோண்டி, கழிவுநீர் கலக்கும் பகுதியை சோதித்தனர்.
இதன் காரணமாக சக்தி நகர், கோவிந்தசாலை பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டு, லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று உப்பு கரைசல் வழங்கினர். பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று முதல் ஒவ்வொரு வீடுகளுக்கும் தினசரி 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தேவைப்படும் பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், டேங்கர் மூலம் வழங்கப்படும் என, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராய ணன் தெரிவித்துள்ளார்.