/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்கனுார் பள்ளியில் மினி மரத்தான் போட்டி
/
திருக்கனுார் பள்ளியில் மினி மரத்தான் போட்டி
ADDED : பிப் 05, 2024 03:53 AM

புதுச்சேரி : திருக்கனுார் பிரைனி ப்ளூம்ஸ் லெக்கோல் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மினி மரத்தான் போட்டி நடந்தது.
திருக்கனூர் பிரைனி ப்ளூம்ஸ் லெக்கோல் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மினி மராத்தான் ஓட்டப் பந்தயப் போட்டி போதை பொருளை பயன்படுத்தவேண்டாம் என்ற முழக்கத்துடன் 5 கி.மீ .,1500 மீட்டர், 800 மீட்டர் துாரம் ஆகிய மூன்று பிரிவுகளில் நடந்தது.
பள்ளி தாளாளர் வழக்கறிஞர் அருண்குமார் தலைமை தாங்கினார்.பள்ளி துணை தாளாளர் திவ்யா, தலைமைச் செயல் அலுவலர் சத்தியவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி என்.சி.சி., கமெண்டிங் ஆபிசர் அமரேஷ் சிங் கங்காரோத், திருக்கனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மரத்தான் போட்டியினை துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வர் தீபா நன்றி கூறினார்.

