ADDED : ஜன 15, 2026 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் பா.ஜ., இளைஞரணி சார்பில் மினி மாரத்தான் போட்டியில் வெற்றிப்பெற்ற நபர்களுக்கு ராஜசேகரன் எம்.எல்.ஏ., பரிசுகளை வழங்கினார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி, திருநள்ளாரில், பா.ஜ., இளைஞரணி சார்பில் 14 வயது முதல் 17 வயதுடைய இரு பாலருக்கும் பல்வேறு பிரிவுகளில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ராஜசேகரன் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்.
இதில் முதல் பரிசாக சுழல் கோப்பை மற்றும் ரூ.5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

