ADDED : ஆக 21, 2024 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தாகூர் கலை அறிவியல் கல்லுாரியில், ரெட் ரிப்பன் சங்கம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், ரெட் ரன் தலைப்பிலான மினி மாரத்தான் போட்டி நடந்தது.
கல்லுாரி வாயில் முன்பு துவங்கிய மினி மாரத்தான் போட்டியை கல்லுாரி துணை முதல்வர் கருப்பசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ரெட் ரிப்பன் சங்க ஒருங்கிணைப்பாளர் எப்சிபா முன்னிலை வகித்தார்.
போட்டியில் 40 மாணவர்கள், 10 மாணவிகள் பங்கேற்றனர். கல்லுாரியில் துவங்கி நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி, உழவர்சந்தை வழியாக 5 கி.மீ., சென்று மீண்டும் கல்லுாரி வளாகத்தை அடைந்தனர்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு கையேடுகள் பொது மக்களுக்கு வினியோகிக்கப் பட்டது.

