தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு


ADDED : செப் 24, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 05:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜவேலு தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் புள்ளியல் துறை அலுவலகங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, இரு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு துறை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அரசு ஊழியர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையப் பதிவேட்டின் நிலைகுறித்து ஆய்வு செய்தார்.

அனைத்துத் துறைகளும் அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் இந்தப் பதிவேற்றப் பணிகளை முழுமையாக முடித்து புதுப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் அனுப் தாகூர், இயக்குநர் அமன் சர்மா மற்றும் புள்ளியல் துறை இயக்குநர் ரத்னகோஸ் கிஷோர் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us