UPDATED : செப் 24, 2026 06:01 PM
ADDED : செப் 24, 2026 05:41 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் மதிய நேரத்தில் சூரியனைச் சுற்றி வட்ட வடிவில் பிரகாசமான ஒளிவட்டம் தோன்றியது.
இதைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தது தங்களது மொபைலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்
வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் காணப்படும் அறுங்கோண வடிவ பனிப்படிகங்கள் வழியாக சூரிய ஒளி செல்லும்போது, ஒளி விலகல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சூரியனைச் சுற்றி 22 டிகிரி அளவில் பிரகாசமான வளையம் உருவாகிறது.
பொதுவாக உயரமான பகுதிகளில் காணப்படும் மெல்லிய சிரஸ் மற்றும் சிரோஸ்ட்ரேட்டஸ் மேகங்களில் இருக்கும் பனிப்படிகங்களே இந்த ஒளிவட்டம் உருவாக முக்கிய காரணமாகும்.
இது சூரிய கிரகணம், எந்தவித ஆபத்தான வானியல் நிகழ்வும் கிடையாது. வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஈரப்பதம் இருப்பதற்கான அறிகுறியாக இது தோன்கிறது.
இந்த நிகழ்வு அறிவியல் ரீதியாக 'சோலார் ஹேலோ' எனப்படும் சூரிய ஒளிவட்ட நிகழ்வு ஆகும். இதே நிகழ்வு கடந்த 1ம் தேதி நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
